யாழ்.நெடுந்தீவு இளைஞர் படுகொலை: 3 சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிப்பு

15

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற படுகொலையுடன் நால்வர் தொடர்புபட்டுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, எஞ்சிய மூன்று சந்தேகநபர்களும் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள பற்றைகளில் மறைந்திருந்த வேளை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் (Jaffna) காவல் நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments are closed.