சுமத்ரா தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் நேரடியாக நாட்டை பாதிக்காவிட்டாலும் நிலநடுக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உலக அளவில் நில நடுக்க நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 -9 ஆக பதிவாகலாம் என்றும், 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகலாம் என்றும் ஜப்பான் அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.