புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) தேவைப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் அறிவித்துள்ளார்.
முன்னர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாகனங்களின் பதிவு மற்றும் கைமாற்றல்களுக்கு இந்த இலக்கம் கட்டாயம் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்யும் போது மாத்திரமே இந்த எண் அவசியம் என தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் தொடர்பில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்படும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் 2025 ஏப்ரல் 15 முதல் TIN (வரி செலுத்துவோர் அடையாள எண்) எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.