இலங்கையின் முன்னாள் படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகப் பிரிட்டனால் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பிரிட்டனின் இந்த நடவடிக்கை கண்டிக்கப்படவில்லை என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.