கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி என்பவர் மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பாலசேகர் என்பர், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளுக்கிடையே ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8ஆம் திகதி ஒரு கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேளே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டொரொண்டோ பொலிஸார், பிக்ரிங் நகரில் விசாரணை நடத்தியமைக்கான காரணங்களை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், நேற்று, கைதான தமிழர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் மீது மேலும் மூன்று கொலை சதி குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு சொத்துத் திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், இந்த வழக்கு ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பிக்ரிஙில் உள்ள இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளன.
மேலும், கோகிலன் பலமுரளி மற்றும் பிரன்னன் பாலசேகர் இருவரும், எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.