உலகிலேயே மிகவும் ஆபத்தான மனிதர் இவர்தான்: பல நாடுகளின் தூதர்கள் அச்சம்

0 7

அமெரிக்காவில் புதிதாக ஆட்சியமைத்துள்ளவர்களில் ஒருவரைப் பார்த்து பல நாடுகளின் தூதர்களே பயப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் புதிதாக அரசமைத்துள்ளவர்களில் ஒருவரைப் பார்த்து உலகிலேயே மிகவும் ஆபத்தான மனிதர் இவர்தான் என பல நாடுகளின் தூதர்களே பயப்படுகிறார்கள்.

அந்த நபர் ட்ரம்ப் அல்ல, அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸ் (JD Vance ).

ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்த அவர் துடிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

விடயம் என்னவென்றால், ட்ரம்பின் கேபினட் அமைச்சர்கள் சிலர் தவறுதலாக தங்கள் சமூக ஊடகக் குழுவில் அமெரிக்க ஊடகவியலாளரான Jeffrey Goldberg என்பவரை இணைத்திருக்கிறார்கள்.

அந்த குழுவில் போர்த்திட்டங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள, முக்கிய ராணுவ ரகசியங்கள் கசிந்துவிட்டன.

அந்த குழுவில் இடம்பெற்றுள்ள வேன்ஸும், அமெரிக்க பாதுகாப்புச் செயலரான பீற்றும் (Pete Hegseth) அமெரிக்கா ஐரோப்பாவுக்கு உதவுவதற்கு எதிரான கடுமையான கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விடயம் வெளியே வந்துவிட்டது.

அதாவது, அமெரிக்கா யேமனிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட, வேன்ஸ், அந்த தாக்குதலால் அமெரிக்காவைவிட ஐரோப்பாவுக்குத்தான் அதிக லாபம் என்று கூறி ஐரோப்பா மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பாவுக்கு மீண்டும் உதவுவதை வெறுக்கிறேன் என வேன்ஸ் கூற, பதிலுக்கு நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன், பரிதாபமான நிலைமை அது என்று கூறியுள்ளார் பீற்.

இந்நிலையில், இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து, வேன்ஸ் ஐரோப்பாவுக்கு மிக ஆபத்தானவர், சொல்லப்போனால், ட்ரம்ப் நிர்வாகத்திலேயே இவர்தான் மிகவும் ஆபத்தான மனிதராக இருக்கலாம் என்று கூறியுள்ளார் ஒரு ஐரோப்பிய தூதர்.

இந்த செய்திகள் வேன்ஸுக்கு ஐரோப்பா மீதுள்ள வெறுப்பை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.