மற்றுமொரு காவல்துறை பிரபலத்தை கைது செய்ய பிடியாணை!

0 6

முன்னாள் வெலிகந்த காவல்நிலைய பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த காவல்துறையினர் 20 பசுக்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய பின்னர், பசுக்களை அரசாங்க பண்ணையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட போதிலும், அவை இரண்டு கடத்தல்காரர்களிடம் மீண்டும் விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த முன்னாள் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு வெளிநாட்டு பயணத்தைடையும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் வெலிகந்த காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிராக அநாமதேய மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த விவகாரத்தை நேரில் விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் திகதி காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதோடு, பிரதான சந்தேக நபரான முன்னாள் காவலநிலைய பொறுப்பதிகாரி தலைமறைவாக உள்ளதாக வடமத்திய மாகாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதன்படி, வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலன்னறுவை எண் 02 நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.