மொட்டு கட்சியில் போட்டியிட பலர் ஆர்வம்! சாகர காரியவசம்

0 2

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சியில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பொய்களுக்கு ஏமாற மாட்டார்கள் என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாதவர்கள் மட்டுமே இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.