அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0 2

அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறும் குடும்பங்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே (Upali Pannilage) தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தொடக்கக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு மாணவர்கள் ஆளாகாமல் தடுக்க பாடசாலை மட்டத்தில் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அஸ்வெசும கொடுப்பனவுகள் பெறுபவர்களில் கூட சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களைப் போன்ற சமூகப் பாதுகாப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்துதல், மாதிரி சமூக வலுப்படுத்தும் கிராமங்கள் மூலம் ‘ஸ்மார்ட் கிராமங்கள்’ திட்டத்தை செயல்படுத்துதல், கிராமப்புற நுண்நிதிக் கடன்களின் சவால்களை எதிர்கொள்வது, மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.