பிறந்த மேனியுடன் கொழும்பில் இருந்து கண்டிக்கு பயணம் செய்த நபர்! துரத்தி பிடித்த பொலிஸார்

0 6

கொழும்பிலிருந்து(Colombo) கண்டிக்கு உந்துருளியில் ஆடையின்றி பயணித்த ஒருவர் கடுகண்ணாவ பொலிஸாரால் (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரும் முயற்சிக்குப் பின்னர் 23 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி-கொழும்பு வீதியில் பயணித்த இந்த நபரை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து அவரைப் பிடிக்க முயன்றனர், ஆனால் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸாரும் அந்த நபரைத் துரத்திச் சென்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை.

இந்தநிலையில், கடுகண்ணாவ மற்றும் பேராதெனிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவ அதிகாரிகள், வீதித் தடைகளைப் பயன்படுத்தி குறித்த உந்துருளியை நிறுத்த முடிந்தது.

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார், அங்கு அதிகாரிகள், குறித்த நபர் தொடர்பான மனநல மதிப்பீட்டைப் பெற அனுமதி கோருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.