இந்தியத் தொழிலதிபரான அதானியை நீங்கள் கைவிடவில்லை, உண்மை என்னவென்றால் அதானியே உங்களை கைவிட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில், இடம்பெற்ற விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அதானியின் இலங்கை திட்டமானது, உள்ளூர் மின்கட்டமைப்பிற்கான மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்ல, இந்தியாவுக்கும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதும் ஆகும்.
இந்தநிலையில், அரசாங்கம் நிலைமையை சரியாகக் கையாளத் தவறியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டது” எனத் தெரிவித்துள்ளார்.