நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி விகிதம் 9% ஆக குறைப்பு

18


கடந்த வார நிலவரத்தின்படி, நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகள் வழங்கும் முதன்மை கடன் வட்டி விகிதங்கள் 9 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில், இலங்கையில் உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி பிரதம கடன் வீதம் (AWPR) முந்தைய வாரத்தின் 9.28% மட்டத்திலிருந்து 9.15% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தில், மக்கள் வங்கி (8.88%), ஹட்டன் நேஷனல் வங்கி (8.92%), கொமர்ஷல் வங்கி (8.84%), யூனியன் வங்கி (8.89%) மற்றும் NDB வங்கி (8.81%) ஆகியன 9.00 சதவீதத்திற்கும் குறைவான அளவைக் கொண்டுள்ளன.

மேலும்,சராசரி பிரதான கடன் வட்டி விகிதங்கள் பேணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Comments are closed.