கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சஞ்சீவவை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படும் டுபாயை சேர்ந்த கெஹல்பத்தர பத்மே, செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 100,000 ரூபாவை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்தே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி அளுத்கடை நீதிமன்றத்தில் வைத்து செவ்வந்தியால் கொலை செய்யப்பட்டார்.
செவ்வந்தி, தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தாயும் இளைய சகோதரரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் வழிகாட்டுதலின் பேரில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தற்போது கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.