நடிகர் விஜய் சொந்தமாக பள்ளி நடத்துகிறாரா? வெளியான ஆதாரம் இதுதான்

0 3

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் தான் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் பணிகளையும் அவரை கவனித்து வருகிறார்.

மேலும் தற்போது பெரிய சர்ச்சையாக பேசப்படும் புதிய கல்வி கொள்கையை பற்றி சமீபத்தில் விஜய் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?” என விஜய் கேட்டிருந்தார்.  

இந்நிலையில் விஜய் பற்றி பாஜகவின் அண்ணாமலை தற்போது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

”விஜய் சொந்தமாக சிபிஎஸ்இ பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். விஜய் வித்யாஷ்ரம் என்ற பள்ளி தான் அது. விஜய் தனக்கு சொந்தமான 2.65 ஏக்கர் நிலத்தை அந்த பள்ளிக்காக 35 வருட குத்தகைக்காக அவர் கொடுத்து இருக்கிறார்” என தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை.

விஜய் அந்த பள்ளிக்கு நிலம் குத்தகைக்கு கொடுத்தது உண்மை தான் என்றாலும், அந்த பள்ளியின் Managementல் விஜய் பெயர் இடம்பெறவில்லை.

Leave A Reply

Your email address will not be published.