தெற்கு இத்தாலியில் (Italy) மத்திய தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை, ஜேர்மன் (German) தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல், இத்தாலியின் லம்பேடுசா தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது குறித்த படகு விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருந்த படகிலிருந்து 51 பேரை மீட்டதோடு, அதில் மயக்கமடைந்த இருவர் உட்பட கப்பலின் கீழ் தளத்தில் 10 உடல்கள் சிக்கியிருந்ததாக ஜேர்மன் உதவிக் குழுவான RESQSHIP தெரிவித்துள்ளது.
இதேவேளை உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு திங்கட்கிழமை காலை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த படகு சிரியா (Syria), எகிப்து (Egypt), பாகிஸ்தான் (Pakistan) மற்றும் பங்களாதேஷ் (Bangladesh)
Comments are closed.