மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் மேம்பாட்டிற்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக அரசாங்கம் 185 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.