யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதி காதலர் தினத்தை இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாடியிருந்தனர்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் வீதிகளில் நிறப்பூச்சுக்களால் தங்களது பெயர்களையும், காதல் வசனங்களையும் பெரிதாக எழுதி கொண்டாடியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளமை பல்வேறு தரப்பினரிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வீதிகளை இவ்வாறு அசுத்தப்படுத்தியுள்ள செயற்பாடு முகம் சுழிக்க வைக்கின்றது.