புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது, சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபரிடமும் அறவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) இன்று (18) நாடாளுமன்றில் வைத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாடகை வருமான வரியானது அதிக வாடகை வருமானம் உள்ளவர்களிடம் மட்டுமே அறவிடப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிக வாடகை வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போதே, அதிபர் ரணில் சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபருக்கும் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளார்.
Comments are closed.