யாழில் அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!

0 9

யாழ்.மாவட்டத்தில் (Jaffna )பிறப்பு, இறப்பு, மற்றும் விவாக பதிவாளர் (தமிழ்மொழி) பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்றைய தினம் (13) யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கோப்பாய், கரவெட்டி பிரிவுகளுக்கான தமிழ்மொழி மூல பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம்- 2415) 13-12-2024ம் திகதி பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17-01-2025 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இறுதித் திகதியானது 17-03-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான வர்தமானி அறிவித்தல் 14-02-2025ம் திகதி வெளியிடப்படும் என பதிவாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.