தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இவருடைய உடலை கிண்டல் செய்யும் வகையில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி, அனைவரும் பதிலடி கொடுத்தார். படத்திற்காகவும், கார் ரேஸுக்காகவும் உடல் எடையை குறைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் பணிபுரிந்து நடிகர் ஆரவ், அஜித் தனது உடல் எடையை குறைக்க என்ன செய்தார் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இதில், நடிகர் அஜித் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் அவரால் உடல் எடையை குறைக்க முடிந்தது என அவர் கூறியுள்ளார். மேலும், அஜித் சைவத்திற்கு மாறினாலும், அவர் எங்களுக்கு அசைவம் சமைத்து கொடுப்பார் என்றும் நடிகர் ஆரவ் கூறியுள்ளார்.
உடல் எடையை குறைக்க அஜித் எடுத்துக்கொண்ட முயற்சி குறித்து நடிகர் ஆரவ் பேசியது, தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற 6ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.