மகள் அதிதி ஷங்கருக்கு கண்டிஷன் போட்ட இயக்குநர் ஷங்கர்.. நடிகை ஓபன் டாக்

18

கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதன்பின், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேசிப்பாயா திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்தநிலையில், நடிகை அதிதி ஷங்கர் சமீபத்திய பேட்டியில் தனது தந்தை தனக்கு விதித்த நிபந்தனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில் “மருத்துவ படிப்பு முடிந்ததும்தான் நடிக்க முயற்சிப்பேன் என அப்பாவிடம் கூறியிருந்தேன். அவர் நீண்ட நேரம் யோசித்துவிட்டு கடைசியில் ஒரு நிபந்தனையுடன் எனக்கு அனுமதி வழங்கினார். அது என்ன நிபந்தனை என்றால், நான் வெற்றிபெறவில்லை என்றால் மருத்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்பதுதான்” என அதிதி ஷங்கர் பேசியுள்ளார்.

Comments are closed.