முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கதிர்காமருக்கு, 140 பாதுகாவலர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும், முன்னதாக ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு கருதி வழங்கியிருந்நதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில் அதிகமானவர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் பலரும் கதைத்து வருகின்றனர்.
இவ்வாறு இருந்தாலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் 30 வருடமாக இருந்து வந்த பங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இறுதியாக தலைமைத்துவம் வழங்கிய ஒருவர்.
அவரை வெறுக்கக்கூடிய நபர்கள் இன்னும் இருக்கலாம். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கலாம்.
அதனால் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் இதனைவிட புத்திசாதூரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.”