நிலவும் சீரற்ற காலநிலை : மலையகத்தில் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

14

தற்போது நாட்டில் நிலவிகடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் இதுவரையில்17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 22 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறித்தலையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Comments are closed.