அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு – குவிக்கப்பட்ட காவல்துறை

0 2

யாழ். மாவட்ட செயலகத்திற்கு (District Secretariat Jaffna) முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த போராட்டமானது, வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தினால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

இதன்போது, போராட்டக்காரர்கள் பல்வேறு பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி வருகின்ற நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வானதொரு பின்னணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், யாழ்.மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, குறித்த கலந்துரையாடல்களில் புதிய அரசங்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் முக்கிய அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ்பபாணத்தில் வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி உள்ளி்ட்ட பகுதிகளிலும் ஜனாதிபதி சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.