வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.