தம்மை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் நாட்டில் பொருட்களின் விலைகள் குறையும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எம்மை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளவும் கைது செய்வதும் ஊடாக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இனி நாட்டில் பொருட்களின் விலைகள் குறைவடைந்து விடும் என்று அரசாங்கம் கூறுகிறது.
உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் தாம் மக்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைச்சர்கள் ஊடகவியலாளர்களை சந்திப்பதில்லை எனவும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளதாகவும், தம்மை மட்டுமன்றி அரசாங்க ஊழியர்களையும் அரசாங்கம் பழிவாங்குவதாகவும், இது ஓர் பிழையான அணுகுமுறை எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாமில் ஆயுதங்கள் காணாமல் போன விடயத்தை ஜனாதிபதி அரசியல் மேடையில் பேசுகின்றார், இது உண்மையில் பாதுகாப்பு பேரவையில் பேச வேண்டிய விடயம் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.
அரச இயந்திரத்தை அடக்கியும் பழிவாங்கியும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.