ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகளை முன்னெடுப்பதற்காக இரு தரப்புகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவில் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசீம், ஹர்சன ராஜகருண ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உள்ளிட்டவர்கள் பேச்சுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்புகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் ஏற்கனவே பேச்சுகள் ஆரம்பமாகி இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக பேச்சுகள் ஆரம்பமாகவுள்ளன.
Comments are closed.