இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) ஆகியோருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், சமகால அரசியல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அண்மையில் கனடாவுக்கு தாம் மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.