எதிர்நீச்சல் சீரியலில் நடித்தது நினைத்து வேதனைபடுகிறேன்!! வேல ராமமூர்த்தி பேட்டி..

13


சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய வெற்றிக்கு காரணமாக இருந்தது மாரிமுத்து தான. அவர் பேசிய ஏய் இந்தாம்மா வசனம் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.

மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் அந்த ரோலில், வேல ராமமூர்த்தி நடித்திருந்தார். ஆனால் அவரின் நடிப்பு மாரிமுத்து அளவுக்கு இல்லை என்பது தான் பலரது விமர்சனமாக இருந்தது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வேல ராமமூர்த்தி, ” சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருந்த சீரியல் எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது”.

“ஆனால் இந்த சீரியலில் ஏன் நடித்தோம் என்று தான் இருந்தது. மிகப்பெரிய அவமானமாகவே நான் பார்க்கிறேன். ஏன் என்றால் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கவே இல்லை” என்று வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

Comments are closed.