மயான தோற்றத்திற்கு மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு

21

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கடந்த 07ஆம் திகதி ஆரம்பமான காட்டுத்தீ தற்போது வரையிலும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நாசம் செய்து வருகின்றது.

இதேவேளை லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

பசிபிக் பலிசேட்ஸ் மற்றும் ஈடன் ஃபயர் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10,000இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் தொடர்ந்து காட்டுத்தீ பாதித்து வருகிறது. சில இடங்களில் மணிக்கு 80-100 மைல்கள் (130-160 கிமீ/மணி) வேகத்தில் கூட காட்டுத்தீ வெப்பமான அனல் காற்றை பரப்பிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்ட பெரிய காட்டுத் தீ இது என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நேற்றைய நிலவரப்படி, தீயினால் 11இதுவரை காட்டுத் தீயில் 11 பேர் பலியாகி உள்ளதுடன் கிட்டத்தட்ட 180,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஒரே மாதத்தில் மட்டும் கலிபோர்னியா மாநிலத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் காட்டுத் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.