முஸ்லீம் நாடு ஒன்று தனது தலைநகரை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. அதற்காக 2 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து தெற்கு மக்ரான் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. தெஹ்ரான் ஈரானின் தலைநகராக 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
ஆனால், தற்போது ஓமன் வளைகுடாவிற்கு அருகிலுள்ள சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள மக்ரான் பகுதிக்கு தலைநகரை மாற்றுவது குறித்து நாடு பரிசீலித்து வருவதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி தெரிவித்துள்ளார்.
இதற்கான சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெஹ்ரான் தலைநகர் என்பதால் ஏராளமான மக்கள் உள்ளனர்.
அங்குள்ள மக்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மின் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு செயல்பட்டு வருகிறது.
முக்கியமாக, டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல, நாடு முழுவதும் வளங்களை மறுபகிர்வு செய்வதற்கான வேலைகளையும் ஈரான் செய்து வருகிறது.
ஈரான் தனது புதிய தலைநகரை மக்ரான் பகுதிக்கு மாற்றுவதன் மூலம் வணிகத்தை மேம்படுத்த முடியும்.
இதனிடையே, ஈரான் தலைநகராக டெஹ்ரானை மாற்றம் செய்ய ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்காக அதிக நிதி செலவு ஏற்படும் என்றும், அலுவலகங்களை மாற்ற வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நீண்ட காலமாகவே ஈரான் தலைநகராக டெஹ்ரானை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையானது 1979ம் ஆண்டில் இருந்தே நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் காலத்தில் தலைநகரை மாற்றம் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.