குஷ்பூ இல்லை என்றால் அந்த நடிகையிடம் ப்ரொபோஸ்.. சுந்தர் சி சொன்ன நடிகை யார் பாருங்க

0 3

நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் சுந்தர் சி. இவர் பெயரை கேட்டாலே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது கலகலப்பு மற்றும் அரண்மனை போன்ற படங்கள் தான்.

காமெடி ஜானரில் இவர் இயக்கும் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சுந்தர் சி பிரபல நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ஒருவரின் மீது அவருக்கு இருந்த கிரஷ் குறித்து பகிர்ந்த விஷயம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் குஷ்பூவை பார்க்காமல் இருந்திருந்தால் நடிகை சவுந்தர்யாவை தான் தேர்ந்தெடுத்து இருந்திருப்பேன். எனக்கு அவரை அந்த அளவிற்கு பிடிக்கும்.

எனக்கு அவர் மீது அதிகமாக கிரஷ் இருந்தது. சவுந்தர்யா ஒரு சிறந்த மனிதர், அவரை போன்ற ஒரு பெண்ணை பார்ப்பது அபூர்வம்” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.