மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா ஏற்கனவே தமிழில் முக்கிய ஹீரோவாக வலம் வரும் நிலையில் தற்போது அவரது தம்பி ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார்.
ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்து இருக்கும் நேசிப்பாயா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இதன் காரணமாக படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் யுவன் சங்கர் ராஜா குறித்து பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” என் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் அதிகமாக கேட்ட பாடல்கள் என்றால் அது யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் தான். இன்று அவர் பாடல்களை கேட்டால் கூட என் கடந்த கால நினைவுகள் வந்து விடும்.
ஒரு நாள் நான் என் காரில் வந்து கொண்டிருந்தபோது யுவன் சாரின் பாடல்களைக் கேட்டு மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டேன். உடனே யுவன் சாருக்கு போன் செய்து பேசினேன். அந்த அளவிற்கு இவர் பாடல்கள் மக்களின் மனதை கவர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.