நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பாப்புலர் ஆனவர்.
அதன் பின் ஹீரோயினாக தென்னிந்திய சினிமாவில் களமிறங்கிய இவர் தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் திரையுலகிற்கு வந்த புதிதில் கொஞ்சம் உடல் பருமனுடன் இருந்தார். ஆனால், அதன் பின், உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார்.
தற்போது, இவர் உடல் எடையை குறைக்க மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம். ஹன்சிகா, காலையில் எழுந்தவுடன் தினமும் 2 கப் தண்ணீர் குடிப்பாராம்.
அதன் பின், ஒரு கப் கிரீன் டீயை குடித்து விட்டு தனது நாளை தொடங்குவாராம். இதன் மூலம், உடல் புத்துணர்ச்சி அடைவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
அதுமட்டுமின்றி, ஜிம் போவதற்கு முன் தினமும் ஒரு கிண்ணத்தில் பப்பாளி பழத்தை சாப்பிடுவாராம். இதனுடன் சேர்த்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் போட்ட ஆம்ப்லெட்டை சாப்பிடுவாராம்.
Comments are closed.