அர்ச்சுனாவை திரைக்குப் பின்னால் பயன்படுத்தும் என்.பி.பி! முன்னாள் எம்.பி பகிரங்கம்

0 6

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) போன்ற பலரை திரைமறைவில் வைத்து காய் நகர்த்துகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

“பல தரப்பினர்களுக்கு பின்னாலே தேசிய மக்கள் சக்தி நின்றது. பல அமைப்புகள், ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் , கட்சிகள் போன்ற துறைகளில் தேசிய மக்கள் சக்தியே ஊடுருவியே இருந்தார்கள் .

எனினும், பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு செல்லும். அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரும் .

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, பேசுவதை போல லெலிலும் காட்டினால் அவரை நாம் வாழ்த்துவோம்”என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.