நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம்: விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு!

0 2

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவித்தல் எழுத்துமூலமாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 82(ஏ) பிரிவின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து 3 மாத காலத்துக்குள்  தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கமைய உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை 2025.02.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.