மலையகத்தில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்

19

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25 இற்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தியுள்ளனர்.

ஹட்டன், காவல்துறையினர், நகர வர்த்தகர்கள் மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.