அநுரவின் இந்திய பயணத்தினுடாகவும் மற்றும் இந்திய பிரதமருடனான சந்திப்பின் ஊடாகவும் தமிழ் மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்களாக இருந்தால் அது தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மோடியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் விவகாரமும் கிடப்பில் போடப்பட்ட ஒன்றாக உள்ளது.
அத்தோடு, அநுர குமார திஸாநாயக்க, மோடி முன்னிலையில் தமிழ் மக்களின் விவகாரம் குறித்து எதையும் வெளிப்படையாக கதைக்கவில்லை.
காரணம், அவர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விவாகரம் என்பது அவர்களுக்கு முதன்மையான விடயமாக தென்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.