ஐந்து கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களில் முதல் இரண்டு பயணிகளும் அதிகாலை 12.30 மணியளவில் டுபாயிலிருந்து FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 25 வயதுடைய வர்த்தகர்கள் இருவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கொழும்பில் வசிக்கும் 32 வயதுடைய மற்றுமொரு வர்த்தகர் துபாயிலிருந்து 12/20 காலை 09.45 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது, 309 கையடக்கத் தொலைபேசிகள், 08 டெப்கள், கையடக்கத் தொலைபேசி பாகங்கள், 12 மடிக்கணினிகள், 02 மேக் புத்தகங்கள், 04 ஐபேட்கள், 20 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், 05 ரவுட்டர்கள், 30 இயர் பட்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூவரையும் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.