பண்டிகைக் கால ஆரம்பம் : உச்சம் தொட்ட மீன்களின் விலை!

0 2

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சாலை மீன் 560 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் மத்தி 1,020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 980 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, பேலியகொடை மத்திய மீன் சந்தையின் மொத்த விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் 1,900 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் லின்னா 450 ரூபாவாகவும், சாலை மீன் ஒரு கிலோகிராம் 900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.