இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் (Nepal) இன்று (21.12.2024) அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகாலையில் மக்கள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த போது லேசாக நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை
கடந்த 2015-ல் 7.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக நேபாளம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.