யாழ்ப்பாணம் (Jaffna) – கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர் நேற்றிரவு (14,12,2024) 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
வடமராட்சி – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் அவரின் உடலில் நோய் அதிகாரிக்க யாழ் போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
யாழ். கரவெட்டியில் துயரம் – எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி | Jaffna Rat Fever Outbreak Uoung Boy Death
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர் நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இதுவரை 66 பேர் எலிக்காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் வந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது 32 நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுகின்றார்கள் என தெரிவித்துள்ளனர்.
Comments are closed.