நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகையான நீலக்கல்லை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இரத்தின கல்லின் மதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
17.42 கரட் எடை கொண்ட இரத்தினக்கல் பதுளை பசறை பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழும் இந்த இரத்தினக்கல்லிற்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையுடன் இணைவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் இலங்கைக்கு இந்த இரத்தினக்கல் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும் என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த உரிமையாளர் சுமார் 20 வருடங்களாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.