இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

5

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 ஒக்டோபர் மாதத்தில் -0.7% ஆகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் இது -0.2 ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 2024 செப்டெம்பரில் 0.5% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் 2024 ஒக்டோபரில் -0.16% ஆகக் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 செப்டெம்பர் 0.16% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஒக்டோபர் 2024 இல் 0.35% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.