சுவிற்சர்லாந்தில் (Swiss) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வலே மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பார ஊர்தியுடன் அதிவேகமாக கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த மேலும் மூவர் வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.