கனடாவின் கிழக்கு ஒன்ராறியோவில் சாலை விபத்தில் தமது மூன்று பிள்ளைகளை மொத்தமாக பறிகொடுத்த பெண் ஒருவரின் குடியிருப்பு தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015ல் மது அருந்தி வாகனம் செலுத்திய ஒருவரால் Jennifer Neville-Lake என்பவரின் மூன்று பிள்ளைகள் பரிதாபமாக மரணமடைந்தனர். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், 2022ல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடைசியாக தற்போது அவரது குடியிருப்பும் தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிள்ளைகள் மூவரின் சாம்பல் கலசமும் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்தின் போது அவர் குடியிருப்பில் இல்லை என்றும், வீடு திரும்பும் போது தான் நெருப்பு பற்றியெரிவதை காண நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, 2015ல் பிள்ளைகள் மரணமடைந்த பின்னர் இரங்கல் குறிப்புகள் அடங்கிய பதிவேடு ஒன்றும் தீக்கிரையானதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை வீடு தீக்கிரையானதாக தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் அதற்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிட மறுத்துள்ளனர். விசாரிக்கப்பட்டு வருவதாகவே Jennifer Neville-Lake தெரிவித்துள்ளார்.
உண்மையில் தீக்கிரையான வீடானது அவரது பிள்ளைகள் மற்றும் கணவருடன் Jennifer Neville-Lake வாழ்ந்த வீடல்ல என்றும், அது பிராம்டன் பகுதியில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Comments are closed.