நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால் காந்த(K.D.Lalkantha) தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். எமது அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளர்களாகியுள்ளமை கட்சி என்ற ரீதியில் நாங்கள் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாகும். தேர்தல் பெறுபேற்றின் வெற்றியை காட்டிலும் அது அப்பாற்பட்டது.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முறையான கொள்கை திட்டங்களுடன் தீர்வு காணப்படும்.என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.