மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில்

30

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார்.

இதன்படி, கட்சியின் இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பதவி விலகல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு சட்டத்தில் தடை இல்லை. இதனால் அந்த இடத்திற்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட உள்ளார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியில் ரவி கருணாநாயக்கவை (Ravi Karunanayake) தேசிய பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.