அநுரவின் அடுத்த அதிரடி! அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழு

27

தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

பத்து பேரைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அனைத்து திட்டங்கள் மற்றும் விலைமனுக் கோரல்கள் தொடர்பில் இந்த குழு கண்காணிப்பு நடத்த உள்ளது.

ஊழல் மோசடிகள் இடம்பெறுவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த விசேட குழு அமைச்சரவையின் அனைத்து நடவடடிக்கைகளையும் கண்காணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.