தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர்

25

தீவிர அரசியலில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை வெலிகம அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம(Rehan Jayawickrama) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (sajith premadasa)அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் மிகவும் கடினமான பயணத்தை கடந்து வந்தாலும், தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் குடும்பம் மற்றும் அவர்களுக்காக உழைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த முடிவு மிக எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் அது சரியான முடிவு என இப்போது உணரமுடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக வெலிகம மாநகர சபையின் மேயராக பணியாற்றிய இவர், இம்முறை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முன்னதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.